சினிமா
’நான் மீண்டும் திரும்பி வருவேன்’- சமந்தா நம்பிக்கை!

நடிகை சமந்தா நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை சமந்தா தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். மையோசிடிஸ் நோய் பாதிப்பால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சமந்தா போராடி வருகிறார். இந்த நிலையிலும், ‘யசோதா’ படத்தின் டப்பிங், ‘சாகுந்தலம்’ படத்திற்கான புரமோஷன் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவர், நடிப்பில் இருந்து சிறிது காலம் விலக போகிறார் என முன்பு சொல்லப்பட்டாலும், ‘குஷி’, ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் படப்பிடிப்பு என தீவிரமாக பங்கேற்று வருகிறார். ‘சாகுந்தலம்’ படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில் சமந்தா கொடுத்திருந்த பேட்டியில் நடிப்புக்காக பிரேக் விடப்போவதைத் தெரிவித்து இருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “நான் ‘குஷி’, ‘சிட்டாடல்’ படப்பிடிப்புக்குப் பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போகிறேன்.
மையோசிடிஸ் நோயில் இருந்து நான் முன்பைவிட நன்றாக தேறி வந்தாலும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதனால், சிறிது காலம் பிரேக் எடுக்கப் போகிறேன். ஆனால், சீக்கிரம் திரும்பி வருவேன்” என பேசியுள்ளார் சமந்தா.