சினிமா செய்திகள்
துபாயிலேயே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய ரெண்டாவது பொண்ணு நான்- கார் ரேஸில் அசத்தும் நிவேதா பெத்துராஜ்!

கார் ரேஸ் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் இதற்கான முறையான பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் ‘ஒரு நாள் கூத்து’ என்னும் திரைப்படம் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்தவராக இருந்தாலும் பெற்றோரின் பணிக்காக துபாயில் வளர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் ஒருபுறம் பிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை நிவேதாவுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதுவும் ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது தனக்குத் தனி பிரியம் என்றும் கூறுகிறார். துபாயில் வாழ்ந்து வந்த போது துபாயிலேயே ஸ்போர்ட்ஸ் கார் வாங்கிய இரண்டாவது பெண் தான் என மிகவும் கர்வத்துடன் கூறும் நிவேதா சமீபத்தில் பார்முலா 1 கார் ரேஸிங்-க்கான முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள கார் ரேஸ் அகாடெமியில் முறையாகப் பயிற்சியை மேற்கொண்டுள்ளார் நிவேதா.
டோலிவுட்டில் 3 படங்களும் கோலிவுட்டில் 2 படங்களும் கைவசம் வைத்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
Nivetha Pethuraj aces Formula Car Race Training!
Read all details here ???????????? https://t.co/dqgiRp4lwF@Nivetha_Tweets #NivethaPethuraj @momentumracingm #FormulaOne #FormulaCarRace pic.twitter.com/zWRvVG77O7
— Rinku Gupta (@RinkuGupta2012) July 12, 2021






