இந்தியா
பீகார்: பாஜக கூட்டணி முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாகத் தேர்வு.. பதவியேற்பது எப்போது?

பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் முதல்வராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முழுமையான கொரோனா பாதுகாப்புகளுடன் பீகாரில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் முடிவில் பாஜகவை விட குறைந்த இடங்களையே நிதி குமாரின் ஜனதா தல கட்சி குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்று இருந்தது. ஆனாலும் நிதிஷ்குமார்தான் பீகாரின் அடுத்த முதல்வர் என்று ஏற்கனவே பாஜக அறிவித்து இருந்தது. அதை உறுதி செய்யும் விதமாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தொடர்ந்து 4வது முறையாக பாஜக முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்க உள்ளார். நாளை நவம்பர் 16-ம் தேதி பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்கிறார்.
தேசிய ஜனநாயக கட்சியின் இந்த கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்ச ராஜ்நாத்சிங் உட்பட பல்வேறு தலைவர்கள் இடம்பெற்று இருந்தனர்.
ராஷ்டிரிய ஜனதா தல கட்சியின் தோல்விக்கு, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களில் தோல்வி அடைந்ததே காரணம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.





