தமிழ்நாடு
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? இன்று முதல் புதிய வாக்காளர் சேர்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

புதிய வாக்காளர்களுக்கான சேர்ப்பு வேலைகள் டிசம்பர் 9, 2025 முதல் தொடங்குகிறது. 18 வயது முடித்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம்.
இத்தொடர்பு பணிகள் தேர்தல் ஆணையம் மேற்பார்வையில் நடக்கின்றன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களின் பகுதியில் உள்ள அருகிலுள்ள தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட BLO (Booth Level Officer) முகாம்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்
ஆதார் அட்டை
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
பிறப்பு சான்றிதழ்
பள்ளி TC
தந்தை/தாய் SIR அல்லது EPIC எண் (இருந்தால்)
தேர்தல் அலுவலர்கள் அனைவரும் தவறாமல் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், வரவிருக்கும் தேர்தல்களில் வாக்களிக்க இது மிகவும் அவசியமானது என்றும் கூறியுள்ளனர்.

