இந்தியா
தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய கமிட்டி.. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

தேர்தல் ஆணையரை நியமிக்க ஆணையம் ஒன்றை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு புதிதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவரை அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் இருந்த பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒருவரை அடுத்த நாளே மத்திய அரசு தேர்தல் ஆணையராக அறிவித்தது.
உடனே அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் அரசு எப்படி இது போன்ற முடிவுகளை எடுக்கிறது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்பது போல பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய கமிட்டி ஒன்றை உச்சநீதிமன்றம் உருவாக்கியுள்ளது. அதன்படி பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட கமிட்டி தான் தேர்தல் ஆணையர் யார் என்பதை முடிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைல்கல் தீர்ப்பில், தேர்தல் ஆணையர்களை நியமிக்க இதே விதியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசியலமைப்பு பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
இப்போது வரையில், தேர்தல் ஆணையர்களை அமைச்சரவையின் ஆலோசனைப்படி மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.