இந்தியா
ஹிஜாப்-காவி விவகாரம்: அரசியல்வாதிகளுக்கு இணையாக மாணவர்கள் மனதில் விஷத்தை வளர்க்கும் நெட்டிசன்கள்!

அரசியல்வாதிகள்தான் மதத்தை வைத்து பிரச்சினையை ஏற்படுத்தி அதில் குளிர்காய கிறார்கள் என்றால் நெட்டிசன்களும் இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சனையாக விட்டது என்பதும் இதனை அடுத்து இந்து மாணவர்கள் காவி உடை அணிந்தும் தலித் மாணவர்கள் நீல நிற உடை அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த விவகாரத்தை வைத்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் குளிர் காய்கின்றன என்பதும் இந்த பிரச்சனையை எந்த அளவுக்கு வெடிக்கின்றதோ அந்த அளவுக்கு அரசியல் செய்யலாம் என்ற எண்ணம் அரசியல்வாதிகளின் மனதில் உள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது.
இந்த நிலையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி நெட்டிசன்கள் இந்த விவகாரத்தை எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி வருகின்றனர். ஹிஜாபுக்கு ஆதரவு என்று ஒரு சில நெட்டிசன்களும், காவிக்கு ஆதரவு என்று இன்னும் சில நெட்டிசன்களும் சமூகவலைதளத்தில் செயல்பட்டு மாணவர்கள் மனதில் விஷத்தை வளர்க்கின்றனர்.
படிக்கிற வயதில் எந்த மதத்தையும் சாராமல் மாணவர்கள் இருக்க வேண்டும் என ஒரு நெட்டிசன் கூட பதிவு செய்யாதது பெரும் வருத்தத்தை அளிக்கிறது என நடுநிலையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.


















