சினிமா செய்திகள்
உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் ‘நவரசா’ திரைப்பட விளம்பரம்..!- வீடியோ

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகி உள்ள நவரசா என்னும் ஆந்தாலஜி படத்துக்கான விளம்பரம் உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பிரசன்னா, பாபி சிம்ஹா, அதர்வா, யோகி பாபு, ரேவதி, பார்வதி, அஞ்சலி, ரித்விகா, ரம்யா நம்பீசன், அதிதி பாலன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த ஆந்தாலஜியில் வரும் 9 பகுதிகளை 9 இயக்குநர்கள் பிரியதர்ஷன், வசந்த், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன் மற்றும் ரதீந்திரன் பிரசாத் ஆகியோர் இயக்கி உள்ளனர்.
இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இன்று மதியம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படத்துக்கு உலகின் மிக உயர்ந்த கட்டடமான துபாயின் பூர்ஜ் கலிஃபா கட்டடத்தில் டிஜிட்டல் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.