சினிமா
விஜய், அஜித் ஜோடியாக நடிக்க மறுத்த சாய்பல்லவி- காரணம் இதுதானா?

அஜித், விஜய் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகை சாய்பல்லவி மறுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

Saipallavi
இந்தப் படத்தில் முதலில் த்ரிஷாவுக்குப் பதிலாக நடிகை சாய்பல்லவியைத் தான் நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கதையில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு போதிய முக்கியத்துவம் இல்லை என சாய்பல்லவி நடிக்க மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதேபோல, இதற்கு முன்பு ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ படத்திலும் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்கும்படி சாய்பல்லவியிடம் முதலில் கேட்கப்பட்டது. ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கும் படத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்பதால் மறுத்திருக்கிறார் சாய்பல்லவி.
ஆனால், இது குறித்து சாய்பல்லவி தரப்போ அல்லது படக்குழு தரப்போ அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ‘என்.ஜி.கே.’, ‘கார்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘எஸ்.கே.21’