இந்தியா
நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் பறையிசை இசைத்த நடிகை!
Published
1 year agoon
By
Shiva
நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் பறையிசை இசைத்து மகிழ்ந்த நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏயுமான ரோஜா குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ரோஜா கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர மாநில அரசியலில் இருந்து வருகிறார் என்பதும் நகரி தொகுதியில் இருந்து அவர் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே.
மேலும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வரும் நடிகை ரோஜா அவ்வப்போது தனது சொந்த தொகுதியான நகரி தொகுதியில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது வழங்கி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் நகரி தொகுதியில் உள்ள பறை இசைக் கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இதனை அடுத்து பறை இசைக் கலைஞர்களின் இசையை அவர் சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகை ரோஜா திடீரென ஒரு கட்டத்தில் எழுந்து அவரே பறை இசையை இசைக்க தொடங்கினார். இசைக் கலைஞர்களுடன் நடிகை ரோஜா பறையிசை இசைத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்கள்: புதிய அமைச்சர்களின் இலாகாக்கள் அறிவிப்பு!
-
அமைச்சர் பதவியேற்ற ரோஜாவுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு: வைரல் வீடியோ!
-
ஆந்திர புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு பதவியா? பரபரப்பு தகவல்
-
முதல்வர் ஸ்டாலினுடன் நடிகை ரோஜா சந்திப்பு: என்ன காரணம்?
-
விமானத்தில் திடீர் கோளாறு: வழக்கு தொடர முடிவு செய்த நடிகை ரோஜா!
-
புடவையை மடித்துக் கட்டிக்கொண்டு கபடி ஆடும் நடிகை ரோஜா!