ஆரோக்கியம்
கொழுப்பை கரைத்து… இஞ்சி இடுப்பழகை பெற உதவும் சில அற்புத ஆயுர்வேத மூலிகைகள்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
கொழுப்பை கரைத்து… இஞ்சி இடுப்பழகை பெற உதவும்… சில அற்புத ஆயுர்வேத மூலிகைகள்
இன்றைய வாழ்க்கை முறை, அதிகப்படியான உட்காரும் நேரம் மற்றும் உடற்பயிற்சி இல்லாததன் காரணமாக, உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு என்பது அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது பொதுவாக வயதானவர்களையும் இளைஞர்களையும் பாதிக்கின்றது. ஆயுர்வேதத்தில், உடல் பருமனை குறைக்க பல பயனுள்ள மூலிகைகள் மற்றும் உணவு பழக்கங்கள் உள்ளன. சில மூலிகைகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை குறைப்புக்கு உதவுகின்றன.
பயனுள்ள ஆயுர்வேத மூலிகைகள்:
- இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி, தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதை கொதிக்க வைத்து அருந்துவது எடை குறைக்கும் பயன் தரும்.
- திரிபலா: நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவைமான திரிபலா உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது.
- மஞ்சள்: இயற்கையிலேயே உஷ்ணத்தன்மை கொண்ட மஞ்சள் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, எடை குறைக்க உதவுகிறது. மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து எடுத்தால், எடை குறைப்பு அதிகரிக்கும்.
- இஞ்சி: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், தொப்பை கொழுப்பை நீக்க உதவுகின்றன. இஞ்சி, எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்த தேர்வு.
- எலுமிச்சை: எலுமிச்சையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், இது செரிமானத்தை மேம்படுத்தி, தொப்பை குறைப்பதில் உதவும்.
- நெல்லிக்காய் (ஆம்லா): நெல்லிக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களை சமன் செய்ய உதவுகிறது. இது தொப்பை குறைவதுடன், முடி உதிர்தல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தருகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

முருங்கைக்கீரை: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 சிறந்த சேர்மைகள்!

கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோ!

நாகசதுர்த்தி: நாகதோஷத்தை போக்குவதற்கான வழிபாடு!

அதிக இஞ்சி உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்: விரிவான விளக்கம்

வீட்டில் கரையான் தொல்லையா..? இதோ இந்த 7 வழிகளை பின்பற்றினாலே போதும் !

சிவப்பு எலுமிச்சை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதிக லாபம் தரும் அரிய வகை எலுமிச்சை!






















