சினிமா செய்திகள்
‘நான் தயாரிக்கிறேன், நடிக்க வாங்க…’- வைகைப்புயல் வடிவேலுவை அழைக்கும் மீரா மிதுன்!

‘நடிகர் வடிவேலுவை வைத்து நான் படம் தயாரிக்கிறேன், நடிக்க வாங்க வடிவேலு’ என மீரா மிதுன் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் வடிவேலு சமீபத்தில் ‘வடிவேலு ரசிகர்கள்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட விழா ஒன்றில் பங்கேற்று பேசினார். வடிவேலு பேசுகையில், “நான் கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறேன். நடிக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது எல்லாம் நரகம். இப்போதும் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரமாட்றாங்க” எனக் கூறி ‘வஞ்சத்தில் வீழ்ந்தேனடா’ என்ற பாடலைப் பாடி கண் கலங்கினார்.
இந்த சூழலில் இந்த வீடியோவைப் பார்த்த மீரா மிதுன் தனது சமுக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, “வடிவேலு வஞ்சத்தில் வீழ்ந்ததாக சொன்னார். உச்சத்தில் இருப்பவர்களை அப்படித்தான் வீழ்த்துவார்கள். ஆனால், நீங்கள் ஒரு சகாப்தம். உங்களை யாருடைய வாழ்க்கையில் இருந்தும் ஒதுக்க முடியாது.
உங்களுடைய தெனாலிராமன் படத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகை. இன்று பலரும் நடிக்கத் தெரியாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் விருப்பப்பட்டால் எனது படத்தில் நடிக்கலாம். நான் ஒரு படம் தயாரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அதில் நடிக்கலாம்” என அழைப்பு விடுத்துள்ளார்.
Art is anybody can do nobody can put a stop to anybody by law is a true fact #actorvadivelu https://t.co/CVdF4880pG
— Thamizh Selvi Mani (@meera_mitun) February 21, 2021
For You Sir ???? #actor #Vadivelu pic.twitter.com/BhAk9dXrVZ
— Thamizh Selvi Mani (@meera_mitun) February 21, 2021