சினிமா செய்திகள்
Maaveeran First Single: வெளியான மாவீரன் படத்தின் முதல் சிங்கள்… பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் விருந்து…!

சின்னத்திரை டூ வெள்ளித்திரை கால் பதித்து, குறுகிய காலத்துக்குள் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் 11 ஆண்டு திரை வாழ்வை நிறைவு செய்ததைக் கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு இன்று (பிப்.17) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ’மாவீரன்’ படத்தின் படக்குழு, படத்தின் முதல் சிங்கிள் சீனா சீனா பாடலை வெளியிட்டுள்ளது.
Here is the first single from #Maaveeran #SceneAhSceneAh – https://t.co/8nmbtPGvJ7
Sung by our dearest Rockstar @anirudhofficial 😎
A @bharathsankar12 Musical!🥁
🕺by @shobimaster
✍🏼 #Kabilan & @CMLOKESH @madonneashwin @AditiShankarofl @vidhu_ayyanna @philoedit @iamarunviswa— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2023
மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின். அவர் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ’மாவீரன்’. இப்படத்தில் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இயக்குநர் மிஷ்கின், நடிகை சரிதா, யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மண்டேலா படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத் சங்கர் மாவீரன் இப்படத்துக்கும் இசையமைக்கிறார். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் மாவீரன் இப்படத்துக்காக சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் அதி நவீன மோகோபாட் புகைப்படக் கருவிகள் பயன்படுத்தி இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற கேமராவை முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்து வவதால், இந்தக் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ள இந்த சீனா சீனா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.