ஆன்மீகம்
பிறந்த தேதிப்படி அதிர்ஷ்ட பொருட்கள்: பணக்காரராக ஆசையா? இந்த 9 எண்களுக்கு இணையான செல்வ ரகசியம்!

பிறந்த தேதிப்படி பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் சக்திவாய்ந்த பொருட்கள்!
நம் வாழ்க்கையில் எண்களுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. எண் கணிதம் எனப்படும் இந்த ஜோதிடக் கலை, பிறந்த தேதியின் மூலம் நம் குணாதிசயங்கள், வாழ்வின் முக்கிய பாதைகள், அதிர்ஷ்டம் போன்றவற்றை உணர முடியும். அதே போல், பிறந்த தேதிக்கேற்ற பொருட்களை வைத்திருந்தால் செல்வம், வெற்றி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இனி எந்தெந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று பார்ப்போம்:
✅ எண் 1 (1, 10, 19, 28):
அதிபதி – சூரியன்.
தங்க நகைகள் அல்லது செம்பு நாணயம் தங்களுடன் இருந்தால் வாழ்வில் செல்வம் பெருகும்.
✅ எண் 2 (2, 11, 20, 29):
அதிபதி – சந்திரன்.
வெள்ளி நாணயம் அல்லது வெள்ளி ஆபரணம் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை கூட்டும்.
✅ எண் 3 (3, 12, 21, 30):
அதிபதி – குரு பகவான்.
மஞ்சள் தூள் கலந்து குளிக்க வேண்டும். இது நேர்மறை சக்தியை அதிகரிக்கும்.
✅ எண் 4 (4, 13, 22, 31):
அதிபதி – ராகு.
பர்ஸில் 4 மிளகை வைத்தால் நம்பிக்கையும் லாபமும் குவியும்.
✅ எண் 5 (5, 14, 23):
அதிபதி – புதன்.
5 ஏலக்காய்கள் பர்ஸில் வைத்திருந்தால் பணவரவு அதிகரிக்கும்.
✅ எண் 6 (6, 15, 24):
அதிபதி – சுக்கிரன்.
2 துண்டு பட்டு துணி பணப்பையில் வைத்தால் செல்வம் சேரும்.
✅ எண் 7 (7, 16, 25):
அதிபதி – கேது.
மெட்டல் ஸ்ட்ராப் வாட்ச் அணிந்தால் அதிர்ஷ்டம் கூடி பணக்காரராகலாம்.
✅ எண் 8 (8, 17, 26):
அதிபதி – சனி பகவான்.
மயில் இறகை பர்ஸில் வைத்திருக்கவும் அல்லது வீட்டில் வைக்கவும். இது பணநிலை உயர்த்தும்.
✅ எண் 9 (9, 18, 27):
அதிபதி – செவ்வாய்.
குங்குமப்பூவை பர்ஸில் வைத்தால் பணம் வருவாய் அதிகரிக்கும்.

