ஆன்மீகம்
2027 ஆம் ஆண்டு வரவிருக்கும் 6 நிமிடங்களுக்கு நீடிக்கும் முழு சூரிய கிரகணம் – அரிய வானியல் நிகழ்வு!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
2027-ஆம் ஆண்டு வரவிருக்கும் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் – இந்த நூற்றாண்டின் அபூர்வமான வானியல் நிகழ்வு!
மிக நீண்ட நேரம் நீடிக்கப்போகும் அரிய கிரகண அனுபவத்திற்கு உலகம் தயாராகிறது!
பொதுவாக சூரிய கிரகணங்கள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கின்றன. ஆனால், 2027 ஆகஸ்ட் 2ஆம் தேதி வரவிருக்கும் கிரகணம், 6 நிமிடங்கள் 23 வினாடிகள் வரை நீடிக்கவுள்ளது. இது சாதாரண கிரகணம் அல்ல; இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சூரிய கிரகணமாகும்.
இந்த முழு கிரகணம் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தெளிவாகக் காணப்படும். இந்த கிரகண நேரத்தில், வானியல் ஆர்வலர்கள், ஆன்மிக நம்பிக்கையாளர், ஜோதிடர்கள் என பலரும் கண் கடிக்காத வானக் காட்சியை நேரில் காண வாய்ப்பு பெறுகிறார்கள்.
இந்த கிரகணம் ஏன் இவ்வளவு நீண்ட நேரம் நீடிக்கிறது?
இந்த நாள், பூமி சூரியனைவிட மிக தொலைவில் உள்ள அப்ஹீலியன் (Aphelion) நிலையைச் சேர்ந்த நாள். இதனால், சூரியன் வானில் சிறிதாகவே தோன்றும். அதே நேரத்தில் சந்திரன், பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிகீ (Perigee) நிலையில் இருக்கும். இதனால் சந்திரன் மிகப் பெரியதாகத் தோன்றும்.
இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், சந்திரன் சூரியனை முழுமையாகவும், நீண்ட நேரம் மறைக்கிறது. இதுவே இந்த கிரகணத்தை மற்ற கிரகணங்களைவிட மிக நீண்டதாக மாற்றுகிறது.
மத மற்றும் ஜோதிடக் கண்ணோட்டத்தில்:
இந்துக்களிடம் கிரகணங்கள் ஆன்மீக ரீதியாக எதிர்மறை சக்திகளை கொண்டவை என நம்பப்படுகிறது. கிரகண நேரத்தில் ஜபம், தியானம், மற்றும் உண்ணாமை போன்ற ஆன்மீக அனுஷ்டானங்கள் கடைபிடிக்கப்படும்.
வானியல் ஆர்வலர்களுக்கான அரிய சந்தர்ப்பம்:
1991 முதல் 2114 வரை நிலப்பரப்பில் இருந்து காணக்கூடிய மிக நீண்ட முழு சூரிய கிரகணம் இதுவாகும். இது ஒரு அரிய அவதானிப்பு மற்றும் அற்புதமான அனுபவம் என்று கூறப்படுகிறது. கிரகண பாதையில் உள்ளவர்களுக்கு, இது வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத தருணமாக இருக்கும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















