பிற விளையாட்டுகள்
FIFA உலகக் கோப்பை போட்டியில் சத்தமில்லாமல் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி!

FIFA உலகக் கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையைச் சத்தமில்லாமல் செய்துள்ளார் லியோனல் மெஸ்ஸி.
அர்ஜெண்டினா கால் பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி (35 வயது), 2022, டிசம்பர் 18-ம் தேதி நடைபெற்ற FIFA உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றதன் மூலம் அதிக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.

இன்றைய FIFA உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றதன் மூலம் மொத்தமாக 26 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடியுள்ளார்.
முன்னதாக ஜெர்மனியின் முன்னாள் கால்பந்து வீரர் லோதர் மாத்தூஸ் 25 FIFA உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருந்த சாதனையை லியோனல் மெஸ்ஸி இன்று முறியடித்துள்ளார்.



















