Connect with us

இந்தியா

ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடருக்கும், இந்தியாவின் #உத்தர_பிரதேச மாநிலத்திலுள்ள கிராமத்துக்கும் #நெருங்கிய தொடர்பு

Published

on

ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடருக்கும், இந்தியாவின் #உத்தர_பிரதேச மாநிலத்திலுள்ள கிராமத்துக்கும் #நெருங்கிய தொடர்புள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடர் இந்திய #வம்சாவளியாவார். அதாவது ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடர் ஆயத்துல்லா ரூஹொல்லா கொமேனி. இவருக்கு பிறகு தான் இரண்டாவது சுப்ரீம் லீடரான தற்போது #கொல்லப்பட்ட #ஆயத்துல்ல_அலி_கொமேனி வந்தார். இவர்கள் இரண்டு பேருக்கும் உத்தர பிரதேசத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

அதாவது கடந்த 1979ம் ஆண்டு வரை ஈரானில் #மன்னராட்சி தான் நடைபெற்றது. அப்போது ஈரானை ஆட்சி செய்தவர் #முகமது_ரிசா_பலவீ. இவர் #அமெரிக்கா உள்ளிட்ட #மேற்கத்திய நாடுகளின் தலைவர்களின் #கைப்பாவையாக

செயல்பட்டு வந்தார். இஸ்லாமிய #கொள்கைகளுக்கு முரனாக செயல்பட்டதால் ஈரானில் இருந்த பலருக்கும் இவரை பிடிக்கவில்லை.

இதனையடுத்து அவருக்கு எதிராக ஈரானில் #புரட்சி 1979ம் ஆண்டில் வெடித்தது. ஈரானில் இடதுசாரி அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும், ஈரானிய மாணவர் இயக்கமும் புரட்சியில் ஈடுபட்டன. இந்த புரட்சிக்கு தலைமை தாங்கியவரின் பெயர் ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனி ( Ayatollah Ruhollah Khomeini). இந்த புரட்சி வெற்றியும் பெற்றது. மன்னராக இருந்த முகமது ரிசா பலவீயின் #மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த புரட்சியை முன் நின்று நடாத்திய ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனி ஈரானின் முதல் சுப்ரீம் லீடரானார். மன்னராட்சியிலிருந்து விடுபட்ட ஈரான் # இஸ்லாமிய_ குடியரசாக  செயல்பட தொடங்கியது. இதனையடுத்து #சட்டங்கள் கடுமையாக்கப்பட்டது. அத்தோடு ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனி தான் ஈரானின் #நவீன_சிற்பி என்று அழைக்கப்பட்டார்.

இதனால் தான் ஈரானில் #எங்கு_சென்றாலும் ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனியின் #புகைப்படங்கள் இருக்கும். நாணயத்தாள், பாடசாலை வகுப்பறை, அரசாங்க கட்டிடங்கள் என திரும்பும் திசையெங்கும் ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவர் #ஷியா முஸ்லிம்களின் #நம்பிக்கையில் உறுதி கொண்டவர். இதனால்தான் ஈரானை ஷியா முஸ்லிம்களின் நாடாக வளர்த்தார்.

ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனியின் தாத்தா உத்தர பிரதேசத்தின் #கிண்டூர் கிராமத்தில் பிறந்தவர். அவரது பெயர் #சைய்யத்_அகமது_மூசாவி_இந்தி. 1800ம் ஆண்டுகளில் கிண்டூரில் பிறந்தவர். 1830ம் ஆண்டுகளில் #இந்தியாவை விட்டு வெளியேறிய அவர், ஈராக்கிலுள்ள நஜாஃப் சென்று, ஷியா முஸ்லிம்களின் முக்கியமானவரான இமாம் அலியின்கல்லறையை  பார்வையிட்டார். அதன்பின்னர் #ஈரானிலேயே குடியேறினார். ஆனாலும் தனது இந்தியப் பூர்வீகத்தை குறிக்க ‘இந்தி’ என்ற பெயரை இணைத்து கொண்டார். இது இன்றும் ஈரானிய உத்தியோகபூர்வ பதிவுகளில் உள்ளது.

இந்த இந்திய தாத்தா சைய்யத் அகமது மூசாவி ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அதில் அவர் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். #இமாமாக மாறினார். அதன்பிறகு ஈரான் ஷியா சமூகத்தில் உயர்பதவிக்கு சென்றார். 3 திருமணங்கள் செய்தார். 5 குழந்தைகளை பெற்றார். அவர்களில் ஒருவர் தான் முஸ்தபா. இந்த முஸ்தபா கடந்த 1902ல் பிறந்தார். இந்த முஸ்தபாவின் மகன் தான் ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனி.

அதாவது ஈரானில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி செய்து இஸ்லாமிக் குடியரசு என அறிவித்து அதன் முதல் சுப்ரீம் லீடராக பொறுப்பு வகித்தவர். உத்தர பிரதேசத்தில் பிறந்த சைய்யத் அகமது முசாவி இந்தி ஈரானுக்கு செல்லாமல் இருந்திருந்தால் ஈரானின் நவீன சிற்பியும் , ஈரான் இஸ்லாமிய குடியரசின் முதல் சுப்ரீம் லீடருமான ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனி கிடைத்திருக்கமாட்டார்.

பிறகு. ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனி கடந்த 1989ம் ல் மரணித்தார். மறைவையடுத்து ஆயத்துல்லா அலி கொமேனி ஈரானின் சுப்ரீம் லீடராக வந்தார். 1989ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை வகித்து வந்த ஆயத்துல்லா அலி கொமேனி நேற்று கொல்லப்பட்டுள்ளார். முன்னதாக ஆயத்துல்லா அலி கொமேனி முதலாவது சுப்ரீம் லீடர் ஆயத்துல்லா ரூஹோல்லா கொமேனியுடன் #நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரை #ஆசிரியராக ஏற்றுக்கொண்டார். இதையடுத்தே ஆயத்துல்லா அலி கொமேனி ஈரானின் 2வது சுப்ரீம் லீடராக வந்தார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆரோக்கியம்1 minute ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா34 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.03.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.03.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

ஈரானின் முதலாவது #சுப்ரீம்_லீடருக்கும், இந்தியாவின் #உத்தர_பிரதேச மாநிலத்திலுள்ள கிராமத்துக்கும் #நெருங்கிய தொடர்பு

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

இந்தியா21 மணி நேரங்கள் ago

மத்திய கிழக்கில் வெறித்தனமான தாக்குதல்கள்…!

இந்தியா23 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் ரோரிங் லயன்”: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் உக்கிரமான தாக்குதல்! “

இந்தியா23 மணி நேரங்கள் ago

திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சியால் அதிமுகவுக்கு ஷாக்

இந்தியா23 மணி நேரங்கள் ago

வீட்ல இருக்கிற லேடீஸ் வேலையே செய்யமாட்டாங்க போலிருக்கு?

இந்தியா24 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.03.2026

இந்தியா6 நாட்கள் ago

செக் புக் வசதியுடன் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 பிப்ரவரி 2026

இந்தியா5 நாட்கள் ago

மூத்த கம்யுனிஸ்ட் தலைவர்களில் ஒருவரானஅய்யா திரு.நல்லகண்ணு 101 வயது நிறைந்தவர் இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார்.

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 23.02.2026

இந்தியா6 நாட்கள் ago

வாக்குத் தவறிய வளர்ந்த நாடுகள் – வாகனப்புகை கட்டுப்படுத்தலில் கடும் பின்னடைவு

தமிழ்நாடு5 நாட்கள் ago

ஆர். நல்லக்கண்ணு மறைவு: எளிமையின் சின்னம், போராட்டத்தின் உயிர் – 101 ஆண்டுகள் போராடிய கம்யூனிஸ்ட் தலைவரின் வாழ்க்கை வரலாறு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.02.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.02.2026

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்1 நாள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

Translate »
Es gibt eine reihe von gründen, warum eine katze mehr trinken könnte als üblich. Azərbaycanın ukraynadakı səfiri elmira axundovanın mövqeyini öyrənib. De bedste action oplevelse tilbud i dag.