இந்தியா
எல்.ஐ.சி பங்குகள் விற்பனை: மத்திய அரசு எடுத்த முடிவால் ஊழியர்கள் அதிர்ச்சி!

எல்ஐசியின் பங்குகள் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு அனுமதி கோரி செபியிடம் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் மத்திய அரசு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஒன்றான எல்ஐசி நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்டுவதற்கான நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு எடுத்துவந்தது.
இதற்காக செபியிடம் அனுமதி பெற வேண்டிய நிலை இருந்ததால் எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய செபி அமைப்பிடம் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. செபி அமைப்பு இதற்கு அனுமதி கொடுத்தால் கோடிக்கணக்கான பங்குகள் பங்கு வெளியீட்டின் மூலம் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து வேளாண்மை துறை செயலாளர் பாண்டே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பங்கு விற்பனை மூலம் எவ்வளவு தொகை திறக்கப்பட உள்ளது என்பது குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் எல்ஐசி வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது கிட்டத்தட்ட 63 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.