சினிமா செய்திகள்
லாரன்ஸை புகழ்ந்து தள்ளிய கியாரா அத்வானி!

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கை அக்ஷய் குமாரை வைத்து நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் லக்ஷ்மி பாம் எனும் பெயரில் இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே படத்தை இயக்குவதில் இருந்து தான் விலகுவதாக லாரன்ஸ் அறிவித்தார். ஏனெனில் தன்னுடைய அனுமதியின்றி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதாக குற்றஞ்சாட்டினார்.
ஆனால், நடிகர் அக்ஷய் குமார் மற்றும் படக்குழுவினர் கேட்டுக் கொண்டதன் பேரில் மீண்டும் அந்த படத்தை இயக்க முடிவு செய்து லாரன்ஸ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் குறித்து பேசிய படத்தின் நாயகி கியாரா அத்வானி, அவரைத் தவிற வேறு யாரும் படத்தை இயக்கினாலும் சரியாக வராது என்றுள்ளார்.
மேலும், படத்தில் இருந்து தான் வெளியேறுவதாக அவர் கூறும்போது, மிகுந்த மன வருத்தம் அடைந்ததாகவும், மீண்டும் அவரே படத்தை இயக்க வேண்டும் என்று தான் வேண்டிக் கொண்டதாகவும் கியாரா அத்வானி கூறியுள்ளார்.

















