சினிமா செய்திகள்
கருணாஸ்-கிரேஸ் தம்பதி செய்து வரும் சைடு-பிசினஸ்: இத்தனை கிளைகளா?

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான கருணாஸ்-கிரேஸ் ஆகியோர் சைடு பிசினஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
நடிகரும் அரசியல்வாதியுமான கிரெஸ் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே. பாலாவின் நந்தா என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி அதன் பின் குணசித்திர நடிகர், ஹீரோ உள்பட பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்த கருணாஸ் அவரைத் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பு மட்டுமின்றி வேறொரு தொழிலிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்த கருனாஸ் ஹோட்டல்களை திறந்தார் .
சென்னை வடபழனியில் அவர் திறந்த ஓட்டல் மிகப்பெரிய அளவில் வருமானத்தை கொடுத்த கொடுத்த நிலையில் அடுத்தடுத்து ஸ்ரீபெரும்புதூர், கரூர் உள்பட ஒருசில இடங்களில் கிளைகளைத் தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது சினிமாவைப் போலவே ஹோட்டல் பிசினஸில் நல்ல வருமானம் வருவதாக கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கிரேஸ், அவ்வப்போது ஹோட்டல்களுக்கு நேரடியாக சென்று சமையல் டிப்ஸ்களையும் மாஸ்டர்களுக்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.