Connect with us

தமிழ்நாடு

பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட சென்னை இளைஞர் திடீரென உயிரிழப்பு!

Published

on

பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் விசுவல் கம்யூனிகேசன் படித்து விட்டு கேமராமேனாக பணியாற்றுகிறார் என்றும் இவர் சில குறும்படங்களை இயக்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ஹோட்டல் ஒன்றில் சிக்கன் சாப்பிட்ட ரஞ்சித் அதன் பின்னர் வீட்டுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் திடீரென ரஞ்சித்துக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குடும்பத்தினர், அவர் சாப்பிட்ட சிக்கனில் தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என புகார் அளித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் அவருடன் சிக்கன் சாப்பிட்ட மூன்று நண்பர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஞ்சித் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரிய வரும் என்றும் அதன் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிக்கன் சாப்பிட்ட சில மணி நேரங்களில் 22 வயது இளைஞர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Super eagles goal keeper francis uzoho denies claims of retirement infinity loaded. Department (SED), Government of Punjab, has announced exciting new opportunities under the “Getting Results: Access and Delivery of Quality Education Services (GRADES)” project. The. Criteria application form.