சினிமா செய்திகள்
கார்த்தியின் அட்டகாசமான ‘தேவ்’ டிரைலர் ரிலீஸ்!
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள தேவ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
மனசுக்கு பிடிச்ச வேலையை செய்வதே நமக்கான வேலை என டிரைலரின் ஆரம்பத்திலேயே கார்த்தி சொல்லும் போதே, இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் எந்த அளவுக்கு எனர்ஜியை கொடுக்கும் என்பது தெரிகிறது.
சாகசம் செய்யும் இளைஞராக கார்த்தி இந்த படத்தில் நடித்துள்ளார். போல்டான பெண் கதாபாத்திரத்தில் நாயகி ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். முன்னதாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக தேவ் படம் ரிலீசாகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாரிஷ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இளமை துள்ளும் பாடல்கள் முன்னதாக ரிலீசாகி இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.




















