சினிமா செய்திகள்
கார்த்தியின் ‘சுல்தான்’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ்

கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகிய ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை ‘சுல்தான்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து ஏப்ரல் 2ஆம் தேதி இந்த படம் ரிலீஸாவது உறுதி செய்து புதிய போஸ்டர் ஒன்றை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படம் ரிலீஸ் ஆவது தள்ளி வைக்கப்படும் என்று வதந்திகள் கிளம்பிய நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஏப்ரல் 2ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.















