சினிமா செய்திகள்
என் ஆளு பண்டாரத்தி, எடுப்பான செம்பருத்தி: ‘கர்ணன்’ படப்பாடல் ரிலீஸ்

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீசாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடலான பண்டாரத்தி புராணம் என்ற பாடல் இன்று மாலை 5.03 மணிக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சற்று முன்னர் கலைபுலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் இந்த பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா மற்றும் ரித்தா பாடியுள்ளனர் என்பதும் யுகபாரதி இந்த பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்த்க்கது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த பாடல் முதல் பாடல் போலவே கேட்பதற்கு இனிமையாக இருப்பதாக பலர் கருத்து கூறி வருகின்றனர். இதனை அடுத்து இந்த பாடல் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.