சினிமா செய்திகள்
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸில் மீண்டும் சிக்கல்: நீதிமன்றம் இடைக்கால தடை!

எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் யுவன் சங்கர்ராஜா இசையில் செல்வராகவன் இயக்கிய திரைப்படம் ’நெஞ்சம் மறப்பதில்லை’. இந்த திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அந்த குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மார்ச் 5ஆம் தேதி ’நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு புரமோஷனும் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று கூட இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியான நிலையில் திடீரென நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் ரிலீஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இந்த படத்தின் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ரிலீசுக்கு மூன்று நாட்கள் இருப்பதால் அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




















