சினிமா செய்திகள்
ஆதிவாசி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிய காஜல் அகர்வால்!
நடிகை காஜல் அகர்வால், ஆந்திராவில் அரக்கு எனும் பகுதியில் ஆதிவாசி மாணவர்கள் படிக்க பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
துப்பாக்கி, ஜில்லா, விவேகம் போன்ற படங்களில் தல மற்றும் தளபதியுடன் நடித்த காஜல் அகர்வால், தற்போது, இளம் நாயகர்களுடன் நடித்து வருகிறார். பெரிய ஹீரோக்களின் படங்களில் பெரிதாக கமீட் ஆவதில்லை. இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, யாருடன் நடிக்கிறேன் என்பது முக்கியமல்ல, என்ன ரோலில் நடிக்கிறேன் என்பது தான் முக்கியம் என்றார்.
நயன்தாரா ஸ்டைலில் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாரிஸ் பாரிஸ் படம் எப்போது வெளியாகிறது என்ற கேள்விக்கு? கடந்த மாதமே படம் வெளியாகி இருக்க வேண்டும், சில காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. அடுத்த மாதம் நிச்சயம் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
மேலும், சமூக சேவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டுகிறீர்களே என்ற கேள்விக்கு? பெண்களுக்காக மராத்தான் ஓடினேன். ஆந்திராவில், அரக்கு எனும் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களின் குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் இல்லை என்பதை அறிந்து, நிதி திரட்டி, அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை கட்டிக் கொடுத்தேன், அவ்வளவுதான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என புன்னகை புரிந்தார்.