தமிழ்நாடு
சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது, தியேட்டரை கொளுத்துவோம்: காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல்

சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் அவர் நடித்து நடிக்கும் படங்களை தியேட்டரில் திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்று காடுவெட்டி குரு மருமகன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் ஆதரவு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ஒரு சில அமைப்புகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பாக வன்னியர் சங்கம் இந்த படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதினார் என்பதும் அந்தக் கடிதத்திற்கு சூர்யாவும் பதில் கடிதம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காடுவெட்டி குரு மருமகன் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சூர்யா இதேபோன்று தொடர்ச்சியாக வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் திரைப்படம் எடுத்தால் அவர் நடிக்கும் திரைப்படங்களை திரையிடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று கூறினார்.
மேலும் சூர்யா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















