வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியிடங்கள் 150 உள்ளது. இதில் சாலை ஆய்வாளர் வேலைகளை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் காலியிடங்கள்:
சேலம் – 09, நாமக்கல் – 04, கிருஷ்ணகிரி – 10, நீலகிரி – 03, புதுக்கோட்டை – 07, திருப்பூர்- 12, கரூர், – 03, திருவண்ணாமலை – 11, தூத்துக்குடி – 25, கடலூர் – 20, நாகப்பட்டினம் – 12, தேனி – 14, திருவாரூர் – 08, திருவள்ளூர் – 07, அரியலூர் – 06
மொத்த காலியிடங்கள்: 150
வேலை: சாலை ஆய்வாளர்
வேலையின் தன்மை: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும், வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றியப் பொறியாளரின் அறிவுரைப்படி செயல்படுதல், ஒதுக்கப்படும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்பார்வையிடல், கான்கீரிட் போடுவதைக் கண்காணித்தல் மற்றும் வேலைகள் குறித்த அறிக்கைகள் சமர்ப்பித்தல்.
மாத சம்பளம்: ரூ.19,500 முதல் 62,000 வரை.
வயது: 01.07.2020 தேதியின்படி 35 வயதிற்கு இருக்காtngov,governmentjob, government of india, job, வேலை வாய்ப்பு, வேலை
க வேண்டும்.
கல்வித்தகுதி: 10 தேர்ச்சியுடன் கட்டுமான வரைதொழில் அலுவலர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இதற்கான கல்வியை முழு நேரப் படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். தொலைதூர கல்வி முறை மற்றும் பகுதி நேரப் படிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கான www.ncs.gov.in என்ற வலைத்தளத்திலும் மற்றும் அந்தந்த மாவட்ட https://tiruvallur.nic.in வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துச் சம்மந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: சம்மந்தப்பட்ட மாவட்டம் அறிவித்துள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்துப் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்குச் சரியான தினங்களுக்கு முன்பாகச் சென்று சேருமாறு பார்த்துக்கொள்ளவும்.











