இந்தியா
வரும் ஆண்டு முதல் 4 முறை ஜே.இ.இ தேர்வுகள்!

2021-ம் ஆண்டு முதல் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்த பரிசீலனை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையில் வீடியோ காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்ச ரமேஷ் பொக்ரியால் உரையாற்றினார்.
மாணவர்கள் தான் தேசிய கல்விக் கொள்கையின் தூதுவர்கள். இந்த கொள்கையைச் செயல்படுத்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஜே.இ.இ தேர்வு தேதி மற்றும் பாடத் திட்டங்கள் குறித்து மாணவர்கள் கேட்ட போது, பிப்ரவரி மாதம் தொடங்கி 4 முறை ஜே.இ.இ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு குறித்துக் கேட்ட போது, வரும் ஆண்டு பாட திட்டத்தை மட்டும் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
















