இந்தியா
75% மதிப்பெண்களை பெறாத மாணவர்கள் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத முடியுமா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஜே.ஈ.ஈ தேர்வு எழுதும் மாணவர்கள் 12ஆம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அது குறித்து தற்போது தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
ஐஐடி உள்படம் உயர் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.ஈ.ஈ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தேர்வு மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு தமிழ் உள்பட பலமொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் ஆங்கிலத்திலும் இந்த தேர்வு எழுதும் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு தேர்வு ஜனவரி 24 முதல் 31ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்வு எழுத குறைந்த பட்சம் 75% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தகுதியை தற்போது தேசிய தேர்வு முகமை நீக்கி உள்ளது. மொழிவாரியான கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி வாரியங்களிலும் 75% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
இதனால் 12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்களை பெறாத தமிழக மாணவர்களும் ஜே.ஈ.ஈ தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கோரிக்கைகளை அடுத்தே தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.