கிரிக்கெட்
அவரை ஏன் எடுக்கலை.. ஏன் இப்படி பண்ணுனீங்க.. இந்திய அணியை வறுத்தெடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்

சென்னை: இந்திய அணியில் முக்கியமான இளம் ஆல் ரவுண்டரை எடுக்காதது குறித்து பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவர் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இதனால் இந்திய அணிக்கு கொஞ்சம் கடுமையான சூழல் நிலவி வருகிறது. அதோடு இந்திய ஆணின் வீரர்களின் பேட்டிங் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய ஏற்கனவே கோப்பை வென்றுவிட்டது.ஆம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது.

Cricket
இதனால் இந்திய அணி இனி கோப்பையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. அதே சமயம் 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இந்திய அணியில் நல்ல மிடில் ஆர்டர் பேட்டிங் இல்லாதது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
பணிச்சுமை காரணமாக ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கிரிக்கெட் ஜாம்பவான் இயான் சாப்பல் இது தொடர்பாக விமர்சனம் வைத்து உள்ளார். அதில், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். அவரை சேர்க்காமல் போனது ஏன்? இது மிகவும் தவறு.
அவருக்கு அணியில் இடம் கொடுத்திருக்க வேண்டும். அவர் நல்ல ஆல் ரவுண்டர். அவர் எவ்வளவு நேரம் ஓவர் போடுகிறார் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு பங்களிப்பை கொடுக்கிறார் என்பதே முக்கியம். அவரை எடுத்திருந்தால் கேமரூன் கிரீன் போல சிறப்பாக ஆடி இருப்பார். ஆனால் இந்திய அணி மிஸ் செய்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.