கிரிக்கெட்
சோகம்.. இவர் மட்டும் இருந்திருந்தால் இந்திய அணி நிலைமையே வேறு.. ஸ்பின்னை புரட்டி இருப்பாரே!

சென்னை: இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இல்லாத வெற்றிடத்தை இந்திய வீரர்கள் தற்போது உணர தொடங்கி உள்ளனர்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் வெல்ல வேண்டும். அல்லது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி ஒரு போட்டியில் தோல்வி அடைய வேண்டும் அல்லது டிரா செய்ய வேண்டும்.

Australia team
தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இதனால் இந்திய அணிக்கு கொஞ்சம் கடுமையான சூழல் நிலவி வருகிறது. 4வது போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுவிட்டது.
இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இல்லாத வெற்றிடத்தை இந்திய வீரர்கள் தற்போது உணர தொடங்கி உள்ளனர். ரிஷாப் பண்ட் பொதுவாக ஸ்பின் பவுலிங்கை மிக சிறப்பாக ஆட கூடியவர். அவர் அளவிற்கு ஸ்பின் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்திய வீரர்கள் கிடையாது.
தற்போது நடக்கும் தொடர் முழுக்க ஸ்பின் பவுலிங்தான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கிறது.இதுவே ரிஷாப் பண்ட் இருந்திருந்தால் அவர் ஸ்பின் பவுலிங்கை neutralise செய்து இருப்பார். ஆனால் அவருக்கு சமீபத்தில் ஹரியானாவில் சாலை விபத்து ஏற்பட்டது. இதனால் ஒருவருடம் அவர் கிரிக்கெட் ஆட முடியாது. இதன் காரணமாக தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.