கிரிக்கெட்
INDvAUS – சதமடித்து அசத்திய ஸ்மித்; அவரைப் போலவே கத்தி கேலி செய்த பும்ரா

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. இதனால் இந்தப் போட்டியில் வெற்றி பெற தங்களது முழுத் திறனையும் இரு அணிகளும் வெளிக்காட்டி வருகின்றன.
இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்தது. அந்த அணி 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 61 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழக்காமல் விளையாடி வருகிறது. ரோகித் மற்றும் கில் இந்திய அணி சார்பில் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்காக அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், சதமடித்து கெத்து காட்டினார்.
ஸ்மித், பேட்டிங் செய்யும் போது, பந்தை டிஃபண்டு செய்து ரன் ஏதும் எடுக்க முடியவில்லை என்றால், ‘நோ ரன்’ என்று கத்துவார். இதைப் போலவே இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் செய்து காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
Hahaha @Jaspritbumrah93 reaction on Smith #AUSvIND ???????? pic.twitter.com/vjgOMokAMn
— Jasprit Bumrah FC (@JBFC93) January 7, 2021


















