இந்தியா
முப்படைகளும் தாக்கிய அதிரடி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்தியாவின் மிகப்பெரிய பதிலடி நடவடிக்கை!

புதுடெல்லி:
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறியீட்டுப் பெயரில் இந்தியா நடத்திய மிகப்பெரிய ராணுவ தாக்குதல், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது முக்கிய பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டது. இது 2016-ம் ஆண்டு உரி தாக்குதல் மற்றும் 2019-ம் ஆண்டு பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு மிகப்பெரிய பதிலடியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் மூவட்ட படைகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலாகும் இது. பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஹவல்பூர் மற்றும் முரிட்கே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் மற்றும் கோட்லி ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பஹவல்பூர் – ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் முக்கிய தளமாக இருந்தது, இதில் மௌலானா மசூத் அசார் தலைமையிலான பயங்கரவாத திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முரிட்கே – லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம்; இது 26/11 மும்பை தாக்குதலுக்கு பின்னணியாக இருந்த ஹபீஸ் சயீத் தலைமையிலான அமைப்பின் தளம்.
முசாஃபராபாத் மற்றும் கோட்லி – இந்திய எல்லைக்கு அருகிலுள்ள இடங்கள்; இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாத குழுக்களின் மையமாகக் கருதப்படுகின்றன.
இந்த தாக்குதலுக்கு முன்பு, இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்தி வந்தது. இது ஒரு திட்டமிட்ட ராணுவ நடவடிக்கையாக அமைந்தது.
பாதுகாப்பு அமைச்சகம் இதைப் பற்றி வெளியிட்ட அறிக்கையில், “நமது தாக்குதல்கள் குறிவைத்து செய்யப்பட்டவையாகவும், எந்த பாகிஸ்தான் ராணுவ தளத்தையும் தாக்காத வகையில் திட்டமிடப்பட்டவையாகவும் இருந்தன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னணி, பஹல்காமில் மத அடிப்படையில் ஆண்கள் மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் எனவும், அதற்கு பதிலடி நடவடிக்கையாக இது அமையிறது எனவும் கூறப்படுகிறது.
