Connect with us

இந்தியா

ஏன் நடந்தது ‘ஆபரேஷன் சிந்தூர்’? வெளியுறவுத்துறை விளக்கம் – இனி என்ன நடக்கப் போகிறது?

Published

on

புதுடெல்லி:
காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா கடந்த இரவுவேளை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற குறியீட்டுப் பெயரில் பெரிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் துல்லியமாக குறி வைத்து அழிக்கப்பட்டன.

இந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், வரலாற்றில் முதன் முறையாக இராணுவ செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமெண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

விக்ரம் மிஸ்ரியின் விளக்கம்:
பகல்ஹாம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானில் உள்ள அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். மேலும், தாக்குதலுக்கு ‘Resistence Front’ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் நேரடி தொடர்புடையது என்றும் கூறினார். இந்தியா மேலும் தாக்குதல்களை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வியோமிகா சிங் கூறியது:
“பாகிஸ்தானில் எதையும் எதிர்கொள்ளும் தயார்நிலையில் இந்தியா உள்ளது,” என உறுதியுடன் தெரிவித்தார்.

கர்னல் சோபியா குரேஷி தகவல்:
“ஆபரேஷன் சிந்தூர்” இரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்றது. இது முழுக்க முழுக்க நம்பகமான உளவுத்துறை தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது எனவும், அனைத்து இலக்குகளும் தீவிரவாத முகாம்களாகத்தான் இருந்தன என்றும் கூறினார்.

இந்தியாவின் இந்த தாக்குதல் மோதலைத் தூண்டும் நோக்கமின்றி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

    Translate »
    Covering breaking news, local stories, business, health, public affairs, and national developments, kearney news aims to keep readers informed with clear, factual, and engaging reporting.