உலகம்
கொரோனாவுக்கு பயந்து துபாயில் செட்டிலாகும் பணக்கார இந்தியர்கள்!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் இருந்து வந்தாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்பட ஒருசில நாடுகளில் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. எனவே இந்தியாவில் உள்ள பல செல்வந்தர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தற்காலிகமாக குடியிருக்க சென்று விட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பணக்காரர்கள் துபாயில் செட்டில் ஆகி வருவதாகவும் அங்கு சொந்தமாக வீடு வாங்கி தற்காலிக விசா வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. துபாயில் ரூபாய் 2 கோடியில் வசிப்பதற்கு நல்ல வீடு கிடைக்கின்றது என்றும் அதுமட்டுமின்றி துபாயில் ரூபாய் 2 கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு ரெசிடென்சி விசா அந்நாடு தருவதாகவும் கூறப்படுகிறது. இதுவே ஸ்பெயின் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் என்றால் குறைந்தபட்சம் ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஆனால் துபாயில் முதலீடு செய்தால் பல்வேறு வித நன்மைகள் இருப்பதாகவும் இந்திய பணக்காரர்களில் கருதி அங்கு முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும் துபாயில் கொரோனா தடுப்புப் பணி சிறப்பாக இருப்பதாகவும் அது மட்டுமின்றி இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதால் ஒரு சில மணி நேரங்களில் இந்தியாவுக்கு தேவை என்றால் சென்று வரலாம் என்பதும் கூடுதல் வசதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தில் இந்தியாவில் உள்ள பல பணக்காரர்கள் துபாயில் தான் வீடு வாங்கி செட்டில் ஆகி வருகின்றனர் என்பதும், துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் கடந்த 5 மாதங்களில் இந்தியர்கள் 12 ஆயிரத்து, 162 கோடி முதலீடு செய்து இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


















