இந்தியா
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்படும். – ஒன்றிய அரசு அறிவிப்பு

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடைசியாக 2011 ம் ஆண்டு நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த கணக்கெடுப்பு 2027 ம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டம் வீடுகளை பட்டியலிட்டு கணக்கெடுக்கும் பணி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.
இந்த கணக்கெடுப்பில் முதல்முறையாக பொதுமக்கள் தாங்களே தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதற்கான முறையான அறிவிப்பு 07.01.2026 அன்று ஒன்றிய அரசு வெளியிட்டது. இந்த முதல்கட்ட பணி அணைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் நடைபெறும். மேலும் இந்த பணி தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்பு சுய கணக்கெடுப்பு பணிகள் 15 நாட்கள் நடத்தப்படும். என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயணன் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
2ம் கட்ட பணிகள் லடாக் யுனியன் பிரதேசம் காஷ்மீர் இமாசலப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் வரும் செப்டம்பரிலும் பிற பகுதிகளில் பிப்ரவரி 2027 லும் நடத்தப்படும்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் வழிமுறையில் நடத்தப்படும். செல்போன் செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். மேலும் இந்ந மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.













