தமிழ்நாடு
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனை மீது பூ மழை தூவிய ஹெலிகாப்டர்கள்!

கொரோனா தடுப்பு முன் பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டன.
உலகமும் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுட்டு வரும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் பாடுபட்டு வருகின்றனர்.
எனவே அவர்களைக் கவுரவிக்கும் விதமாகச் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை மீது ஹெலிகாப்டர் மூலம் பூக்களைத் தூவி கொரோனா முன்பணியார்களை முப்படையினர் கவுரப்படுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் மருத்துவர்களுக்குப் பூங்கொத்துக்கள், பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதே போன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் இன்று மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








