தமிழ்நாடு
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு: பெரும் பரபரப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தங்களது இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி பலரது வீட்டில் வருமான சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் சோதனைக்கு பின்னரே அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொகைகள் மற்றும் பொருட்கள் குறித்த விவரம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , எம்.சி.சம்பத் ஆகியோர்களின் வீடுகளிலும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடந்து உள்ளது. அதேபோல் திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு உள்பட ஒரு சிலரின் வீடுகளில் ஏற்கனவே வருமான வரி சோதனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





