Connect with us

இந்தியா

இனி UPI மூலம் வெளிநாட்டுக்கும் பணம் அனுப்பலாம்.. சூப்பர் அறிவிப்பு..!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியாவாக மாற்றிய பிரதமர் மோடிக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

UPI மூலம் வங்கிக்கு செல்லாமல் எளிய முறையில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதும் இதனை நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களில் உள்ளவர்களும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை உள்நாட்டில் மட்டுமே UPI பண பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிநாட்டுக்கும் பணம் பரிமாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முதலாக வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்துவதை போன்பே அறிமுகம் செய்கிறது என்பது தற்போது சந்தோஷமான செய்தி ஆகும்.

#image_title

இதனை அடுத்து அனைத்து போன்பே பயனர்களும் UPI மூலம் வெளிநாடுகளில் உள்ள வணிகரகளுக்கு பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சர்வதேச கடன் மற்றும் அந்நிய செலவாணி அட்டைகள் மூலமே வெளிநாட்டு வணிகர்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போன்பே மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் பயனர்கள் இந்திய வங்கி கணக்கிலிருந்து வெளிநாட்டு நாணயத்தில் பணம் டெபிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டமாக நேபாளம், பூட்டான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச வணிக விற்பனை கியூஆர் குறியீடுகளுடன் பண பரிவர்த்தனையை அனுமதித்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் மேலும் சில நாடுகளுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து போன் பே நிறுவனர் மற்றும் சிடிஓ ராகுல் சாரி கூறுகையில் ’UPI இன்டர்நேஷனல் மூலம் உலகின் பிற நாடுகளுக்கும் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிப்பது ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு கேம் சேஞ்ஜராக இருக்கும், வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், வெளிநாடுகளில் பொருட்கள் வாங்கினால் UPI மூலமே பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?