இந்தியா
சாதாரண ஃபோன்களிலும் UPI பணப்பரிவர்த்தனை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போது ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஐபோன்களில் மட்டுமே UPI மூலம் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையில் சாதாரண போன்கள் மூலம் UPI பண பரிவர்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் UPI மூலம் ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்யும் நடைமுறை வழக்கத்துக்கு வந்தது என்பது தெரிந்ததே. இந்த முறையின் மூலம் கூகுள் பே, போன்பே, வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் UPI மூலம் பணப்பரிவர்த்தனை சேவையை செய்து வருகின்றன.
குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இதுவரை 4 கோடி பயனர்களுக்கு மட்டுமே UPI மூலம் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 10 கோடி பேர்களை அனுமதிக்க என்சிபிஎச் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருப்பவர்கள் கூட UPI பயன்படுத்தும் திட்டத்தை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது. இதற்காக UPI 123 என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் சாதாரண பெண்கள் மூலமும் UPI பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் இதனால் UPI பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.