வணிகம்
ஜனவரி 1 முதல் ரூபே, யூபிஐ மூலம் பணம் செலுத்துபவர்களுக்குக் கூடுதல் கட்டணம் கிடையாது!

ஆண்டுக்கு 50 கோடி வரை விற்று முதல் வர்த்தகம் செய்யும் வணிகர்களிடம், ரூபே கார்டு அல்லது, யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூபே மற்றும் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கான இந்த கூடுதல் கட்டணத்திலிருந்தன விளக்கம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
எனவே ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்யும் வணிகர்களால், இதை ஒரு சலுகையாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்.
இந்த கூடுதல் கட்டணமானது வணிக நிறுவனங்கள் வங்கிகளுக்கும், கார்டு பேமெண்ட் நெட்வொர்க்குகளுக்கும் பிற நிதி பரிமாற்ற தரகர்களுக்கு வழங்குவதாகும்.