தமிழ்நாடு
இரவு 9 மணியை கடந்தும் ஓட்டுப்பதிவு… ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்குப்பதிவு எவ்வளவு?

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று விருவிருப்பாக நடந்து முடிந்தது. சில தொகுதிகளில் வாக்காளர்கள் இரவு வரை வந்துகொண்டிருந்ததால் அங்கு இரவு 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தல்லில் 75% வாக்குகள் பதிவாகியுள்ளது.

#image_title
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி காலமானதை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக சார்பில் தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் தேர்தல் களம் அனல் பறந்தது.
இந்த தேர்தல் இரு முக்கிய கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தலாக உள்ளதால் வாக்காளர்களை இரு தரப்பினரும் விழுந்து விழுந்து கவனித்து பரிசு மழையில் மூழ்கடித்தனர். ஒருவழியாக நேற்று இவை எல்லாம் முடிவுக்கு வந்து விருவிருப்பாக காலை முதலே வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் கூலி வேலை செய்யும் மக்கள் என்பதால் வேலைக்கு சென்று விட்டு தாமதமாக வந்து வாக்களித்ததால் அங்கு இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. மற்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து அங்கு 75% வரை வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. இவை மார்ச் 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. அன்று காலை 11 மணியளவில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்துவிடும்.