இந்தியா
ஆஸ்கர் விருது வென்ற படங்களை இயக்கியது பிரதமர் மோடி தான்… கிச்சுகிச்சு மூட்டிய காங்கிரஸ் தலைவர்!

95-வது ஆஸ்கர் விருது விழாவில் இந்திய மொழி படங்களான ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. பல்வேறு தரப்பினரும் விருது வென்றவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

#image_title
இந்திய மொழி படங்கள் ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் இந்த வாழ்த்துமழை தொடர்ந்தது. நேற்று மாநிலங்களவை கூட்டத்தொடரில் ஆஸ்கர் விருது வென்ற படக்குழுவினருக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, இந்த வெற்றியை பாஜகவினர் உரிமை கொண்டாடிவிடக் கூடாது. நாங்கள் தான் தயாரித்தோம், நாங்கள் தான் பாடல் எழுதினோம், நாங்கள் தான் கதை எழுதினோம், குறிப்பாக மோடிதான் இந்தப் படங்களை இயக்கினார் என்றோ நீங்கள் சொல்லிவிடக் கூடாது. இது இந்திய நாட்டின் பங்களிப்பு என்றார். இவரது இந்த பேச்சு அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.