இந்தியா
கங்கணா ரணாவத்தை சிறை பிடித்த விவசாயிகள் – வைரல் வீடியோ

தமிழில் ஜெயம்ரவி நடித்த தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். அதன்பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் அவர் நடித்து வந்தார். குறிப்பாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும், பாஜகாவின் ஆதரவாளராக செயல்படும் அவர் மோடி அரசுக்கு ஆதரவாகவும், பாஜக அரசை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் தீவிரவாதிகள் ரேஞ்சிக்கு விமர்சித்து வந்தார். குறிப்பாக பாஜக அரசு கொண்டு வந்த வேளாண்சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை அவர் கடுமையாக திட்டி வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற அவரை பஞ்சாப் விவசாயிகள் சிறை பிடித்தனர். அவரின் காரை வழி மறித்து போராட்டம் நடத்தினர். மேலும், அவருக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விவசாயிகள் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பிவந்த சங்கி கங்கனா ராவத்தை பஞ்சாப் விவசாயிகளால் சிறைபிடிப்பு ????
— ɱąཞƙ2ƙąƖı (@Mark2Kali_) December 3, 2021




















