பர்சனல் பைனான்ஸ்
உங்கள் பிஎப் கணக்கின் பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் திருத்துவது எப்படி?

பிஎப் பணத்தை ஆன்லைன் மூலம் திரும்பப் பெற முயலும் போது பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்கள் ஒன்றாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒருவேலை உங்கள் பிஎப் கணக்கில் உள்ள பெயர், பிறந்த தேதி மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதை எப்படி செய்வது இங்கு விளக்காகப் பார்க்கலாம்.
படி 1: யுஏஎண் இணையதளத்தில் யுஏஎண் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இந்த (https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/) இணைப்பில் உள்நுழைய வேண்டும்.
படி 2: உள்நுழைந்த பிறகு Manage என்ற மெனுவிற்கு சென்று, Modify Basic Details என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
படி 3: பின்னர் உங்கள் சரியான ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை அளித்து Update என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 4: Update என்பதை கிளிக் செய்த பிறகு Pending approval by Employer என்ற தகவல் கிடைக்கும்.
படி 5; நீங்கள் வேலை செய்யும் நிறுவனம், நீங்கள் அளித்த விவரங்களை ஏற்ற பிறகு, சம்மந்தப்பட்ட பிஎப் அலுவலகத்தின் அனுமதிக்குச் செல்லும். அவர்களும் திருத்தத்திற்கான விவரங்களைச் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை ஏற்பார்கள். முழுமையாகத் திருத்தங்கள் செய்து முடிக்க 30 நாட்கள் வரை கால தாமதமாகும்.