தமிழ்நாடு
இந்தியாவின் சிறந்த மற்றும் கடலோர சுற்றுலா தளமாக தமிழ்நாட்டின் கடற்கரை தேர்வு!

இந்தியாவின் சிறந்த கடற்கரை மற்றும் கடலோர சுற்றுலா தளமாக தமிழ்நாட்டின் லெமூர் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா டுடே நிறுவனம் 2023-ம் ஆண்டு சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது.
அதில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள லெமூர் கடற்கரை என அழைக்கப்படும் காண்டிபுரம் கடற்கரை அதன் அழகிய இருப்பிடம் மற்றும் இயற்கைக் காட்சிகளுக்குப் பெயர் பெற்றதாக உள்ளது.
எனவே இந்த லெமூர் கடற்கரையை இந்தியாவின் சிறந்த கடற்கரை மற்றும் கடலோர சுற்றுலா தளமாக தேர்வு செய்வதாக இந்தியா டுடே நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா டுடே வழங்கிய இந்த விருதை, தமிழ்நாடு சுற்றுலா கழகம் இயக்குனர் சந்தீப் நண்டுரி, ஐ.ஏ.எஸ் பெற்றார். இந்தியா டுடே ஆசிரியர் விருப்பத்தின் கீழ் இந்த விருது லெமூர் கடற்கரைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.