வணிகம்
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு EPS ஓய்வூதியம் எவ்வளவு? இதோ எளிய கணக்கீடு!

EPFO நிறுவனத்தின்கீழ் செயல்படும் ஊதியத் திட்டமான EPS (Employee Pension Scheme) மூலம், 58 வயதை முடிக்கும் ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு மாதம் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை கணக்கிடுவது எப்படி என்பது குறித்த தகவலை இங்கே பார்க்கலாம்.
EPS ஓய்வூதியக் கணக்கீடு எப்படி?
EPS திட்டத்தின் கீழ், ஊழியர் மற்றும் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் PF-க்கு பங்களிக்கின்றனர். இதில் நிறுவன பங்களிப்பிலிருந்து 8.33% EPS-க்கு செல்கிறது.
உதாரணமாக:
மாத சம்பளம் ரூ.15,000 என்றால் → ரூ.15,000 x 8.33% = ரூ.1,250 EPS-க்கான பங்களிப்பு.
EPS ஓய்வூதியம் கணக்கிடும் சூத்திரம் (Old Formula):
மாதாந்திர ஓய்வூதியம் = (அடிப்படை சம்பளத்தின் சராசரி × பணிக்காலம்) / 70
உதாரண கணக்கீடு:
வேலை தொடங்கிய வயது: 25
ஓய்வு வயது: 58
பணிக்காலம்: 33 ஆண்டுகள்
ஓய்வுக்கு முன் 60 மாத சராசரி சம்பளம்: ரூ.40,000
மாத ஓய்வூதியம் = ரூ.40,000 x 33 / 70 = ரூ.18,857
குறிப்பு:
EPFO தற்போது புதிய கணக்கீட்டு முறையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இங்கே காட்டப்பட்ட கணக்கு பழைய விதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டது. புதிய வழிமுறைகள் வெளியானதும் புதிய கணக்கீடு செய்யலாம்.

















