Connect with us

வணிகம்

ஜூன் 1 முதல் இவை மாற்றம்! கேஸ் விலை முதல் PF பணம் எடுக்கும் முறை வரை 6 முக்கிய அறிவிப்புகள்!

Published

on

ஜூன் 1, 2025 முதல் பல முக்கிய விதிமுறைகள் புதிய மாற்றங்களுடன் அமலுக்கு வரவிருக்கின்றன. இந்த மாற்றங்கள் உங்கள் தினசரி செலவுகள் மற்றும் சேமிப்புகளை நேரடியாக பாதிக்கக்கூடியவை என்பதால், அவற்றை தெரிந்துகொள்வது முக்கியம்.

ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் முக்கியமான 6 மாற்றங்கள்:

🔹 1. கேஸ் சிலிண்டர் விலை மாற்றம்

ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி கேஸ் சிலிண்டர் விலை புதுப்பிக்கப்படும். ஜூன் மாதத்திலும் வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் விலை மாற்றத்தைக் கவனிக்க வேண்டும்.

🔹 2. PF பணம் ATM-ல் இருந்து எடுக்கலாம்

இப்போது வரை EPFO-வின் PF பணத்தை எடுத்திட சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், ஜூன் 1 முதல் ATM வழியாக நேரடியாக PF தொகையை எடுக்க முடியும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

🔹 3. கிரெடிட் கார்டு Auto Debit-ல் அபராதம்

Auto Debit மூலம் கிரெடிட் கார்டு பணம் செலுத்துபவர்கள், தவறு நிகழ்ந்தால் அதற்கு 2% வரை அபராதம் விதிக்கப்படும். இந்த விதிமுறை ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

🔹 4. ATM பணம் எடுக்கும் கட்டணம் அதிகரிக்கலாம்

ஒரு மாதத்திற்கு சில இலவச பணம் எடுத்தல் உண்டு. அதைத் தாண்டினால் பணம் எடுக்கும் போதுஅதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஜூன் 1 முதல் புதிய கட்டண விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🔹 5. ஆதார் திருத்தம் இலவசம் ஜூன் 14 வரை மட்டுமே

ஆன்லைனில் ஆதார் திருத்தங்களை ஜூன் 14 வரை இலவசமாக செய்யலாம். அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஆதார் அப்டேட் செய்ய நினைப்பவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

🔹 6. ரேஷன் அட்டை KYC அவசியம்

ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் KYC பதிவு செய்ய வேண்டும். காலக்கெடு மே 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவறினால் ஜூன் 1 முதல் ரேஷன் பொருட்கள் தடைசெய்யப்படலாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த 6 மாற்றங்களும் நேரடியாக உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமையப்போகின்றன. உங்கள் ஆதார், ரேஷன் KYC, கிரெடிட் கார்டு கட்டணம், PF எடுப்பு மற்றும் கேஸ் விலை மாற்றம் போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..