சினிமா செய்திகள்
இந்தி, தெலுங்கில் செம வரவேற்பாம்: ‘பீஸ்ட்’ படக்குழுவினர்களே ஆச்சரியம்!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்களே கிண்டல் செய்து வருகின்றனர். நடுநிலை ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் இந்த படத்தை கிழிகிழி என்று கிழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் தமிழை தவிர மற்ற மொழிகளிலும் ஓரளவு வரவேற்பு பெற்று இருப்பதாக தெரிகிறது .
குறிப்பாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு என்றும் தெலுங்கு ரசிகர்கள் ‘பீஸ்ட்’ படத்தை கொண்டாடி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது .
அதேபோல் ஹிந்தியிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதாக தெரிகிறது. மேலும் மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த படத்தின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.