ஆரோக்கியம்
தண்ணீர் பண்ணா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! இதய நோய், பக்கவாதத்தைத் தடுக்கும் அதிசய மீன்!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
இதய நோயையும் பக்கவாதத்தையும் தடுக்கும் தண்ணீர் பண்ணா மீன்: சிறுமிகளுக்கு முதல் பெரியவர்களுக்கு பரிபூரண ஆரோக்கியம் தரும் மீன்!
தண்ணீர் பண்ணா மீன், தமிழில் “தும்பிலி மீன்” என்றும், ஆங்கிலத்தில் Lizard Fish என்றும் அழைக்கப்படுகிறது. இது கருஞ்சிவப்பு நிற முதுகு மற்றும் வெள்ளை வயிறு கொண்ட, நீளமான உடலமைப்பில், முக்கோண முகத்துடன் காணப்படுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா போன்ற பகுதிகளில் இந்த மீன் பொதுவாக காணப்படுகிறது. சீசன் பேதமின்றி ஆண்டின் எந்த நேரத்திலும் கிடைக்கக்கூடியது.
சிறப்பு அம்சங்கள்:
மீனின் சதை மாவு போல் மென்மையாக இருப்பதால், குழந்தை முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் அடர்த்தியான சதை, பெரிய நடுமுள் மற்றும் பல சில்லுகள் உள்ளன. சிறிய வகை மீன் எனினும், ஒரு மீன் கால் கிலோ எடையை எட்டக்கூடியது. மீனின் நீளம் சுமார் 15 முதல் 20 செ.மீ வரையிலுள்ளது. விலை சுமார் கிலோ ரூ.200 வரை உள்ளது.
மருத்துவ நன்மைகள்:
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மற்றும் அமினோ ஆசிட் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்க சிறந்தது.
கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பாஸ்பரஸ் மூலம் பற்கள் பலமாக இருக்கும்.
புரதச்சத்து அதிகமுள்ளதால் இதய தமனிகளை பாதுகாத்து, உடல் எடையை கட்டுப்படுத்தும்.
சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படும் பிரச்சனைகளை குணமாக்கும்.
தண்ணீர் பண்ணா மீனை, பொறித்து, குழம்பு செய்து அல்லது தென் தமிழகப் பகுதிகளில் சுட்டு சாப்பிடும் வழக்கமும் உண்டு.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















